அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெருங்கருனையினால் முடச்சிக்காட்டில் முதன், முதலாக தவ்ஹீத் முறையிலான திருமணம் சிறப்புடன் நடந்தேறியது. அல்ஹம்துலில்லாஹ். இதற்கு முன் தவ்ஹீத் கொள்கைச்சகோதர்களுக்கு திருமணம நடந்திருந்தாலும் அதற்கு பல விதமான முட்டுக்கட்டைகளை எங்களூர் சுன்னத்ஜமாஅத் விதித்துதான் திருமணம் நடந்துள்ளது. மாலை போடவேண்டும்,மத்ஹப் பிரிவுகளை கணித புத்தகத்தில் பதிந்தாக வேண்டும், வரதட்சனை வாங்கியாக வேண்டும், புரோகிதரை வைத்து “அல்லிஹூமா” ஓதித்தான் நிக்காஹ் செய்யவேண்டும் போன்ற மார்க்கம் சொல்லாத பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், இல்லை என்றால் ஊர் ஓலை தரமாட்டோம், நாங்கள் யாரும் திருமணத்திற்கு வரமாட்டோம் போன்ற ஏகப்பட்ட கெடு,பிடிகளை போட்டுதான் தவ்ஹீத் சகோதர்களின் திருமணம் நடந்துள்ளது. இறுதியாக நபிவழி திருமணத்தை கண்டிப்பாக எனது திருமணத்தில் கடைபிடித்தே ஆக வேண்டுமென சகோதரர் ஷாஜகான் உறுதியோடு இருந்த காரணத்தால், ஊர் சுன்னத் ஜமாஅத் முன் வர மறுத்த நிலையில்,சகோதரருக்கு நபிவழி திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்கு ஊரில் தவ்ஹீத் குடும்பத்தார்களும், மற்றும் ஊரில் நபிவழி திருமண த்தை விரும்பக்கூடிய சகோதர்களும், மாற்று மத சகோதர்களும்ஏரளானமானவர்கள் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.அல்லாஹ்வின் அருளால் இந்த திருமணம் முடச்சிக்காட்டில் வரலாற்றில் ஒரு மாபெறும் திருப்புமுனையாகும், இதுவரை முடச்சிக்காட்டில் பெரும் ஆடம்பர திருமணத்தையே கண்டு வந்த நிலை மாறி, முதன்,முதலாக மிகவும் சிக்கனமாகவும்,எவ்விதமான படோகமுமின்றி மிகவும் எளிமையாகவும்நடந்துள்ளது இது அல்லாஹ் வழங்கிய மாற்றமேயன்றி வேறில்லை.இரு வீட்டார்களுக்கிடையில் எவ்விதமான கொடுக்கல்,வாங்கல் மறைமுகமாகவோ,அல்லது வெளிப்படையாகவோஎதுவும் வாங்கவில்லை, மணமகன் N.ஷாஜகான் மணமகளுக்கு மூன்று பவுன் தங்க நகை மஹராக கொடுத்து தூய்மையான நபிவழியில் இந்த திருமணத்தை முடச்சிக்காடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வைத்தது.அல்ஹம்துலில்லாஹ்.

Post a Comment

ததஜ முடச்சிக்காடு கிளையின் கீழ் செயல்படும் இணையதளம்

 
Top